என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » நாமக்கல் கலெக்டர்
நீங்கள் தேடியது "நாமக்கல் கலெக்டர்"
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று 702 வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் நடந்தது. கொல்லிமலையில் நடந்த முகாமை கலெக்டர் ஸ்ரேயாசிங் பார்வையிட்டார்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 1-ந் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின் தொடர்ச்சியாக 1.11.2021 முதல் 30.11.2021 வரை சிறப்பு சுருக்க முறை வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்த பணியின் போது, 1.1.2022 அன்று 18 வயது பூர்த்தி அடையும் நபர்கள் தங்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம் எனவும், 13, 14, 27 மற்றும் 28-ந் தேதிகளில் நடைபெறும் சிறப்பு முகாம்களிலும் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் தொடர்பான மனுக்களை பொதுமக்கள் அளிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி நேற்று நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், சேந்தமங்கலம், ராசிபுரம், பரமத்திவேலூர், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய 6 சட்டசபை தொகுதிகளில் 702 வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் சிறப்பு முகாம்கள் நடைபெற்றது.
கொல்லிமலை ஊராட்சி ஒன்றியம், அசக்காட்டுப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற சிறப்பு முகாமில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்த பணிகளை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது கொல்லிமலை தாசில்தார் கிருஷ்ணன் உள்பட அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி பணியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த சிறப்பு முகாம் இன்றும் (ஞாயிற்றுக்கிழமைஸ) நடைபெற இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
எருமப்பட்டி அரசுபள்ளிகளில் கலெக்டர் ஸ்ரேயாசிங் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவிகளும் உயர்கல்வி பயில தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று கலெக்டர் ஸ்ரேயாசிங் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது சமூக இடைவெளியுடன் அரசு வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி மாணவிகளுக்கு பாடங்கள் நடத்தப்படுவதை உறுதி செய்தார். பிளஸ்-2 படிக்கும் மாணவிகளின் வருகை பதிவேட்டை பார்வையிட்ட கலெக்டர், பள்ளிக்கு அடிக்கடி விடுப்பு எடுக்கும் மாணவிகளின் விவரங்களைகேட்டறிந்தார்.
பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவிகளும் உயர்கல்வி பயில தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
மேலும் பள்ளிக்கு வராத மாணவிகளின் வீடுகளுக்கு நேரில் சென்று மீண்டும் அவர்கள் பள்ளிக்கு வந்து பாடம் படிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தினார்.
பின்னர், எருமப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சத்துணவு கூடத்தில் உணவின் தரத்தை கலெக்டர் சாப்பிட்டு ருசி பார்த்தார். மேலும் எருமப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சமூக இடைவெளியுடன் அரசு வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு மாணவர்களுக்கு சத்துணவு வழங்கப்படுவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
முன்னதாக எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியம் புதுக்கோட்டை கிராமத்தில் பருத்தி, நிலக்கடலை, சோளம் ஆகியவை பயிரிடப்பட்டு உள்ள விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கி இருப்பதை வேளாண்மைத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளுடன் கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து, வருவாய்த்துறை ஆவணங்கள், வரைபடங்களை ஒப்பிட்டு விவரங்களை சரிபார்த்தார்.
இந்த ஆய்வுகளின் போது, நாமக்கல் உதவி கலெக்டர் மஞ்சுளா, மாவட்ட கல்வி அலுவலர் ராமன் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், விவசாயிகள், அரசுத்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.
நாமக்கல் அருகே விபத்தில் சிக்கிய கணவன், மனைவியை கலெக்டர் ஆசியா மரியம் மீட்டு உடனடி சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார்.
நாமக்கல்:
நாமக்கல் அருகே உள்ள களங்காணியை சேர்ந்தவர் கங்காதரன் (வயது 50). இவரது மனைவி நிர்மலா (45). இவர்கள் ரெட்டிப்புதூரில் ஜவுளிக்கடை நடத்தி வருகின்றனர். நேற்று மதியம் 12.30 மணி அளவில் இருவரும் கடையில் இருந்து ஒரு மொபட்டில் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தனர்.
களங்காணியில் சாலையை கடக்க முயன்றபோது, அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள், இவர்களது மொபட் மீது மோதியது. இதில் கங்காதரன், நிர்மலா ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். அப்போது அந்த வழியாக ராசிபுரத்தில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பை பார்வையிட்ட கலெக்டர் ஆசியா மரியம், சேந்தமங்கலத்தில் நடக்கும் பயிற்சியை பார்வையிட சென்றார்.
அந்த நேரத்தில் விபத்து நடந்ததால் உடனடியாக மீட்பு பணியை முடுக்கிவிட்ட கலெக்டர், 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்க உத்தரவிட்டார். 108 ஆம்புலன்சு வர சற்று தாமதம் ஆனதால், செய்தி மக்கள் தொடர்பு துறையினர் சென்ற ஜீப்பில், படுகாயம் அடைந்த இருவரையும் ஏற்றி, உடனடியாக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தார்.
அங்கு விபத்தில் படுகாயம் அடைந்த கங்காதரன் மற்றும் அவரது மனைவி நிர்மலாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சீரான முறையில் தண்ணீர் வழங்கக் கோரி, வீசாணம் மக்கள், நாமக்கல் கலெக்டர் ஆசியா மரியத்திடம் மனு அளித்தனர்.
நாமக்கல்:
சீரான முறையில் தண்ணீர் வழங்கக்கோரி, வீசாணம் மக்கள், நாமக்கல் கலெக்டர் ஆசியா மரியத்திடம் மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
நாமக்கல்லை அடுத்த, வீசாணம் ஊராட்சியில், 700 குடியிருப்புகள் உள்ளன. வீசாணம், கடக்கால் புதூர், ஒட்டக் குளம்புதூர், ஆதிதிராவிடர் தெரு, கிழக்குச்சாலை, தேவேந்திர குலதெரு, அருந்ததியர் தெரு, மேற்குத்தோட்டம், பால கருப்பணார் தெரு, வீனஸ் காலனி, சிவாஜி நகர், ஜெ.ஜெ.நகர், திருவள்ளுவர் காலனி உள்ளிட்ட பகுதிகளில், 3,500 பேர் வசிக்கின்றனர்.
இந்நிலையில் இரண்டு மாதங்க ளுக்கு முன்பு 10 நாட்களுக்கு ஒரு முறை குடும்பத்திற்கு, 10 குடம் தண்ணீர் வந்தது. தற்போது ஒரு மாதமாக தண்ணீர் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் தண்ணீரை விலைக்கு வாங்கி உபயோகிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒருசில பகுதியினர், நகராட்சி நிர்வாகம் மூலம் வழங்கப்படும் குடிநீரை பயன்படுத்துகின்றனர். ஆனால், மேற்கு தோட்டம், பாலகருப்பணார் நகர், ஜெ.ஜெ.,நகர், சிவாஜி நகர், வீனஸ் காலனி, திருவள்ளுவர் காலனி ஆகிய பகுதிகளில் கடந்த, மூன்றாண்டுகளாக தண்ணீர் வருவது இல்லை. தங்குதடையின்றி தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #tamilnews

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வருகிற 2-ந் தேதி அனைத்து மதுபானக் கடைகளையும், மது அருந்தும் கூடங்களையும் மூடவேண்டும் என்று நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் அறிவித்துள்ளார்.
நாமக்கல்:
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வருகிற 2-ந் தேதி அனைத்து மதுபானக் கடைகளையும், மது அருந்தும் கூடங்களையும் மூடவேண்டும் என்று நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:
வருகிற 2 -ந் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக்கடைகள், மது அருந்தும் கூடங்கள் மற்றும் உரிமம் பெற்ற மது அருந்தும் கூடங்கள் உள்ளிட்டவைகளை மூட வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
எனவே அன்று அனைத்து மதுபானக்கடைகள், மது அருந்தும் கூடங்கள் அனைத்தையும் மூடி வைக்க வேண்டும். மீறி திறந்தாலோ, மறைமுகமமாக விற்பனை செய்தாலோ சம்மந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

×

X